இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸ்திரேலியா வரவுள்ள நிலையில், , சிட்னி டவுன் ஹால் மற்றும் அதனைச் சுழவுள்ள பகுதிகளில் போராட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு பாலஸ்தீன செயற்பாட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், அந்த கோரிக்கையை நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார் மறுத்தனர்.
“ சிட்னி டவுன் ஹாலில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றம் வரை பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும், அது பாதுகாப்பு பகுதியென்பதால் அனுமதி வழங்கப்படவில்லை.” என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, பாதுகாப்பு பகுதியென அறிவிக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படக்கூடும் என தெரியவருகின்றது.
“சட்டபூர்வமான, அமைதியான போராட்டத்தில் அவர்கள் பங்கேற்க முடியும்.” என பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேல் ஜனாதிபதி நாளை மறுதினம் ஆஸ்திரேலியா வரவுள்ளனர்.