ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவுக்கிடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி இந்தோனேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
“ ஜனாதிபதி பிரபோவோவும் நானும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொது பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்,
இது ஆஸ்திரேலியா-இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஒரு புதிய நிலைக்கு கொண்டுசெல்லும்.” என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.
அதேபோல புதிய பொருளாதார ஒப்பந்தம் இரு நாடுகளிலும் வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.
வலுவான, மிகவும் பாதுகாப்பான மற்றும் அமைதியான பிராந்தியத்தை உருவாக்குவதற்கு இணைந்து செயல்படுவோம் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டார்.