ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபருக்கு ஆஸ்திரேலியா திரும்புவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
வடகிழக்குசிரியாவில் உள்ள அல்-ரோஜ் முகாமிலிருந்து 11 பெண்கள் மற்றும் 23 குழந்தைகள் உட்பட மொத்தம் 34 ஆஸ்திரேலியர்கள் டமாஸ்கஸ் வழியாக ஆஸ்திரேலியா வருவதற்கு முயற்சித்துள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனையின் பேரிலேயே குறித்த நபருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேற்படி 34 Nபுரில் ஒருவருக்கு மட்டுமே இந்த தற்காலிகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனையோர் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
எனினும், இவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதற்கு எவ்வித இராஜதந்திர உதவியும் வழங்கப்படமாட்டாது என பிரதமர் அந்தோனி அல்பானீஸி நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.