ஆஸ்திரேலியாவின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸை கொலை செய்யபோவதாக தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்த சிட்னி நகரைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி காவல்துறையினர் அந்த நபரின் வீட்டில் நடத்திய சோதனையில், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் சில மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கருத்து சுதந்திரத்தை மதிப்பதாகக் கூறும் அதிகாரிகள், அதே வேளையில் இத்தகைய கிரிமினல் மிரட்டல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளனர்.
மின்னணு தொழில்நுட்பத்தின் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் காண்பது எளிது என்பதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது அந்த நபர் நீதிமன்றத்தில் ஆயுதக் குற்றச்சாட்டுகள் மற்றும் கொலை மிரட்டல் தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
இத்தகைய வன்முறையான மிரட்டல்கள் சட்ட ரீதியான கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.