சீனாவிலிருந்து சிட்னி விமான நிலையம் வந்தடைந்த குயின்ஸ்லாந்து நபர் ஒருவர், சிறார்களை விலைக்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகளால் சோதனையிடப்பட்ட அவரது மின்னணு சாதனங்களில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல்கள் கண்டறியப்பட்டன.
சுமார் 30,000 பிலிப்பைன்ஸ் பெசோக்களை வழங்கி குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களைத் தவறாகப் பயன்படுத்த அவர் திட்டமிட்டதாகக் காவல்துறை தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் மீது குழந்தை பாலியல் குற்றங்கள் உட்படப் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிட்னி நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்துள்ள நிலையில், அவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.