டிரம்ப் நிர்வாகத்தின் சில இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் , ஆஸ்திரேலிய ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் $1.4 பில்லியன் ரீஃபண்ட் refunds கிடைக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த வரிகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதா என்பதை இந்த வழக்கு தீர்மானிக்கும்.
இந்த வரிகளால் குறிப்பாக உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பெரும் நிதி இழப்பைச் சந்திப்பதோடு, அமெரிக்க சந்தையில் தங்களின் போட்டித்தன்மையையும் இழந்து வருகின்றன.
நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக அமைந்தாலும், நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து பணத்தைத் திரும்பக் கோர வேண்டும், அது தானாகவே கிடைக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதே நேரத்தில், அமெரிக்க அரசாங்கம் மாற்றுச் சட்டங்கள் மூலம் இந்தத் தொகையைத் திருப்பித் தருவதைத் தவிர்க்க முயற்சி செய்யலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த நியாயமற்ற வரிகளை நீக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கிறது.