பிரிஸ்பேன் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயிலை நபர் ஒருவர் வாகனத்தால் மோதி சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வன்முறைச் செயலைத் தொடர்ந்து, வெறுப்புணர்வைத் தூண்டுதல் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 32 வயது மதிக்கத்தக்க ஒருவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது போன்ற குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என்று குயின்ஸ்லாந்து Premier David Crisafulli உறுதியளித்துள்ளார்.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை இது மீண்டும் தூண்டியுள்ளது.
புதிய சட்டமூலம் தொடர்பில் பல்வேறு மத அமைப்புகளுடன் போதிய ஆலோசனைகள் நடத்தப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.