தாய்லாந்தின் புகெட் தீவில் நடந்த மோதலில் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாலையில் சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாகவே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
58 வயது ஆஸ்திரேலியரே தாக்குதலில் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து தப்பியோடிய தாக்குதலை நடத்திய துருக்கியை சேர்ந்த 29 வயது இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது மரணத்தை விளைவித்த தாக்குதல்
தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் உடற்கூறு ஆய்வு மற்றும் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.