ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் நிலவும் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் உள்ள ஆஸ்திரேலிய குடிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், வணிக ரீதியிலான விமானங்கள் கிடைக்கும்போதே அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி மூடப்படுவதால் ஏற்படக்கூடிய விமானப் போக்குவரத்து இடையூறுகள் குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் தீவிர கவலை தெரிவித்துள்ளது.
மேலும், அங்கிருக்கும் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற பாதுகாப்பு சூழல் காரணமாக, மக்கள் போராட்டங்களைத் தவிர்க்கவும் போதுமான அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவர்கள் இந்தப் பதற்றமான சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதோடு, இஸ்ரேலின் தற்காப்பு உரிமையையும் ஈரானிய மக்களின் சுதந்திரத்தையும் ஆதரிக்கின்றனர்.