ஈரான் உச்ச தலைவரின் மரணம் தொடர்பில் ஆஸ்திரேலியா கவலை அடையவில்லை என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்துள்ளார்.
"ஆஸ்திரேலிய மண்ணில் தாக்குதல்களை ஏற்பாடு செய்ததற்கு அவர் பொறுப்பு. அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படமாட்டாது.” எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் தமது நாடு பங்கேற்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
மேற்படி தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவுக்கு தெரியப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஆஸ்திரேலிய தேசிய அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது.