துபாய்க்கு அருகிலுள்ள அல் மின்ஹாத் விமானத் தளத்தின் மீது ஈரான் படைகள் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அங்கிருந்த ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலின்போது துபாய் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்களின் உட்கட்டமைப்புகளும் சேதமடைந்ததை அடுத்து, ஈரான் அரசின் இந்த பொறுப்பற்ற செயலை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளிவிவகார அமைச்சர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஈரானின் அணுஆயுதத் திறனைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் இந்த போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஆஸ்திரேலியப் படைகள் 2003 ஆம் ஆண்டு முதல் இந்தத் தளத்தைத் தலைமையகமாகப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.