சிட்னி, பாட்ஸ் பாயிண்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இரு பெண்கள்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை நடந்த இந்தச் சம்பவத்தில், தாக்குதலுக்கு இலக்கான பெண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த நபரைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட டேசர் (வயளநச) முயற்சி தோல்வியடைந்ததால், தற்காப்பிற்காக அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் அந்தப் பெண்களுக்கு முன்பே தெரியாதவர் என முதற்கட்ட விசாரணையில் நம்பப்படுகிறது. தற்போது இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உயர்மட்டப் போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.