மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அங்கு சிக்கியுள்ள சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஆஸ்திரேலியர்களுக்கு உதவும் வகையில் ஆறு அவசரகால உதவிக் குழுக்கள் அனுப்பட்டுள்ளன.
வான்வழிப் போக்குவரத்து முடக்கத்தால் வெளியேற முடியாமல் தவிப்பவர்களுக்குத் தேவையான தூதரக ஆதரவை இந்த குழுக்கள் வழங்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக, துபாயிலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வணிக ரீதியிலான விமானம் தற்போது சிட்னி நோக்கிப் பயணித்து வருகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மீட்புக் குழுவினரின் பயண விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த மீட்பு நடவடிக்கை, அந்த பிராந்தியத்தில் உள்ள ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல சவால்களுக்கு மத்தியிலும், மீதமுள்ள குடிமக்களைத் தாய்நாட்டிற்கு அழைத்து வர ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.