இந்திய பெருங்கடலில் அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானின் அதி நவீன போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்தே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமது படைகள்தான் இத்தாக்குதலை நடத்தின என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி உறுதிப்படுத்தினார்.
இந்தியா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படை பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியாவில் இருந்து தேனா போர்கப்பல் நேற்று ஈரான் நோக்கி பயணிக்கையிலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.