தீவிர வலதுசாரியான ஜேக்கப் ஹெர்சன்ட், கடந்த வருடம் நாஜி வணக்கம் செலுத்தியதற்காக செவ்வாய்க்கிழமை குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் நாஜி வணக்கம் செலுத்திய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட முதல் நபர் இவரென்பது
குறிப்பிடத்தக்கது.
நாஜி வணக்கத்துக்கு தடை விதிக்கும் சட்டம் விக்டோரியாவில் நடைமுறைக்குவந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, 25 வயதான ஜேக்கப் ஹெர்சன்ட் வேண்டுமென்றே வணக்கம் செலுத்தியதை மாஜிஸ்திரேட் பிரட் சோனட் செவ்வாயன்று கண்டறிந்தார்.
மெல்பேர்ண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில், நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் ஹெர்சன்ட் தனது கையை உயர்த்தி வணக்கம் செலுத்துவதைத் தெளிவாகக் காட்டியது.
இதற்கான அதிகபட்ச தண்டனை 12 மாத சிறை அல்லது 23,000 டொலர்களுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படும்.
இந்த தீர்ப்பு ஆஸ்திரேலியாவில் மீண்டும் எழுச்சி பெற்ற மற்றும் ஆபத்தான நவ-நாஜி இயக்கத்தின் சோலார் பிளெக்ஸஸுக்கு ஒரு பலத்த அடி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சபா.தயாபரன்