நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தனது பொதுப் பதவிக் காலத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.
ஹர்ஷன சூரியப்பெரும இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய குடியுரிமைகளை பெற்றிருந்தாரா என்பது குறித்தும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றபோது தனது ஆஸ்ரேலிய குடியுரிமையை முறையாகத் துறந்தாரா அல்லது துறப்புக்கான விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பித்தாரா என்பது குறித்தும் அண்மையில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட ஊடகத்துறைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ,
" ஹர்ஷன சூரியப்பெரும நாடாளுமன்ற உறுப்பினராகவோ, பிரதி அமைச்சராகவோ, அல்லது நிதி அமைச்சின் செயலாளராகவோ இருந்த காலத்தில், இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை.
அவர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் அல்ல. அந்தப் பதவிகளில் பணியாற்றியபோது அவர் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்தால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்.
அவர் இந்தப் பதவிகளை வகித்தபோது இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.