ஆஸ்திரேலிய அரசாங்கம் MV Hondius எனும் சொகுசு கப்பலில் சிக்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளை மீட்பதற்கான சிறப்பு விமான ஏற்பாடுகளை செய்துள்ளது.
மேற்படி கப்பலில் பரவி வரும் ஆபத்தான ஹண்டாவைரஸ் (Hantavirus) தொற்று காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதோடு, பலருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்படுபவர்கள் நாடு திரும்பியவுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்கள் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வைரஸ் எளிதில் பரவாது என்று நிபுணர்கள் கூறினாலும், உலக சுகாதார அமைப்பு பயணிகளுக்கு 42 நாட்கள் தனிமைப்படுத்துதலை பரிந்துரைத்துள்ளது.
எலிகள் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ் பாதிப்பு முதன்முதலில் ஜோகன்னஸ்பர்க்கில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.