சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் லேகெம்பாவில் நிகழ்ந்த கோரமான வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஆரம்பத்தில் இரண்டு வாகனங்கள் மோதுண்ட நிலையில் அருகிலேயே மேலும் ஏழு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது.
அவசரக்கால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்றனர்.
இந்த விபத்தின் காரணமாக கேன்டர்பரி சாலை இருபுறமும் மூடப்பட்டுள்ளதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.