கன்பரா, பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் வயோதிப பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தாக்குதல் நடத்திய 51 வயது ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றாலும் வழியில் 71 வயதான வயோதிபப் பெண் உயிரிழந்துவிட்டார்.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சம்பவத்தின் பின்புலம் தொடர்பில் விசாரிக்கப்பட்டுவருகின்றது.