இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் சிட்னி நகரில் நிரந்தர 'தமிழர் நினைவுத் தூபி' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுத் தூபி, எதிர்வரும் மே 16 சனிக்கிழமை காலை 9:45 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park பொது இடத்தில், Cumberland நகர சபையின் பேராதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.
'தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - சிட்னி' அமைப்பின் முன்னெடுப்பில், சிட்னியிலுள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளின் ஆதரவோடும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Cumberland நகர சபை முதல்வரினால் இந்தத் தமிழர் நினைவுத் தூபி திறந்து வைக்கப்படவுள்ளது.