ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் டெய்லர், நாட்டின் வீட்டுவசதி நெருக்கடியைச் சமாளிக்க குடியேற்றத்தைக் குறைக்கப்போவதாக ஒரு அதிரடித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
வீடுகள் கட்டப்படும் வேகத்திற்கு ஏற்பவே வெளிநாட்டினர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், விதிமுறைகளைமீறியுள்ள சுமார் 70,000 பேர் வரை நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டுக்கடன் சலுகைகள் இனி ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும்.
மேலும், குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குதல் மற்றும் தேவையற்ற அரசாங்கச் செலவுகளைக் குறைத்தல் போன்ற பொருளாதார சீர்திருத்தங்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், இத்தகைய கொள்கைகள் மற்ற வலதுசாரி கட்சிகளின் கருத்துகளைப் பிரதிபலிப்பதாக ஆளும் கட்சியினரால் விமர்சிக்கப்படுகின்றன.
வன் நேஷன் கட்சியின் எழுச்சியை தடுக்கும் வகையிலேயே எதிர்க்கட்சி தலைவர், குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கி உள்ளார்.
லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடியேற்ற திட்டத்தில் மேற்படி கொள்கைகளை அமுல்படுத்தப்படும்.