இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் சிட்னி நகரில் நிரந்தர 'தமிழர் இனவழிப்பு நினைவு தூபி' திறக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய நிகழ்வு இன்று (16) சனிக்கிழமை காலை 9:45 மணிக்கு நடைபெற்றது.
Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்து வைத்தார்.
சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park பொது இடத்தில், Cumberland நகர சபையின் பேராதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.
'தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - சிட்னி' அமைப்பின் முன்னெடுப்பில், சிட்னியிலுள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளின் ஆதரவோடும் நினைவுத்தூபி நிறுவப்பட்டுள்ளது.