மெல்பேர்ண் தென்கிழக்கு பகுதியில் மூன்று நாய்களால் கடித்துக் குதறப்பட்ட 20 வயது யுவதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வீட்டின் பின்புறத்தில் வைத்தே நேற்று இவர் நாய்க்கடிக்கு இலக்கானார்.
நாய்களிடமிருந்து யுவதியை பாதுகாப்பதற்காக மூன்று நாய்களையும் சுட்டுக்கொல்லவேண்டிய நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டது.
அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவரின் கை பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என தெரியவருகின்றது.