துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான Richard Marles பதவி விலக வேண்டும் - என்று துணை எதிர்க்கட்சி தலைவர் Sussan Ley வலியுறுத்தியுள்ளார்.
துணை பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் அவரது தலைமை அதிகாரியால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக்கொண்டே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தான் பதவி நீக்கப்பட்டதாகவும், தொழில் ரீதியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும் துணை பிரதமரின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட Jo Tarnawsky குற்றஞ்சாட்டியுள்ளார்.
மிகவும் கொடூரமாக தன்னை நடத்தியுள்ளனர் எனவும், இதனால் உளரீதியாக தான் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே , தலைமை அதிகாரியை முறையற்ற விதத்தில் நடத்தியுள்ள விவகாரம் தொடர்பில், துணை பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று துணை எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.