குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், அரசியல் நிறுவனங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட ஆபத்தான பதிவுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, அவர் மீது மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தை ஆஸ்திரேலிய Federal காவல்துறை மற்றும் உளவு அமைப்புகள் இணைந்து தீவிரமாக விசாரித்து வருகின்றன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது அந்த நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.