நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுத் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான ஆஸ்திரேலியர்கள் அடங்கிய சுற்றுலாப் பயணக் குழுவில், மேற்கு சிட்னியைச் சேர்ந்த தம்பதியும் அடங்குவர் என்ற தம்பதியினர் இடம்பெற்றிருந்தனர் என்பது உறுதியாகியுள்ளது.
வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் (52) மற்றும் அவரது மனைவி சித்ரா வெங்கட்ராமன் (46) ஆகிய இருவருமே அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 'ஹிமாலயன் கிளேசியர்' (Himalayan Glacier) சுற்றுலா நிறுவனம் மூலம் பயணம் மேற்கொண்டபோது இந்த இயற்கை பேரிடரில் சிக்கியுள்ளனர்.
திபெத் எல்லைக்கு சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதே தனது பெற்றோருடன் கடைசியாகப் பேசியதாக அவர்களின் மகன் தெரிவித்துள்ளார்.
அதன்பின் அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என்றும், இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
"என் பெற்றோர் உட்பட அவர்களுடன் சென்ற அனைவரும் பாதுகாப்பாகத் திரும்புவதையே நான் விரும்புகிறேன்" என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
லாங்டாங் பள்ளத்தாக்கில் (Langtang Valley) 15 ஆஸ்திரேலியர்கள் உட்பட மொத்தம் 47 பேர் இன்னும் காணாமல்போயுள்ளதாகச் சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
காணாமல்போன ஆஸ்திரேலியக் குழுவில் 11 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.