2026 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரானுடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கணித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டால் மேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாலஸில் நடைபெறவுள்ள குடியரசுத் கட்சியின் தேசிய மாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,
"தேர்தலுக்குப் பிறகு போர் உடனடியாக முடிவடையும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அவர்களால் இனி தாக்குப் பிடிக்க முடியாது.
தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த அவர்கள் தீவிரமாக முயல்கிறார்கள்" என்று கூறினார்.
ஈரானுடன் டிரம்ப் மேற்கொண்டு வரும் போர், எவ்வித உடனடி முடிவும் தெரியாமல் ஏழாவது மாதமாக நுழைந்துள்ளது.
அமெரிக்கா ஐந்து ஈரானிய எண்ணெய் தாங்கிகளை மூழ்கடித்ததைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகில் 10 கப்பல்களைத் தாக்கியதாக ஈரான் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த மோதலால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்து, ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை $100 ஐத் தாண்டியது.
ஈரான் போர் மற்றும் தீவிரமடைந்து வரும் வாழ்க்கைச் செலவின நெருக்கடி குறித்த வாக்காளர்களின் விரக்தி காரணமாக டிரம்பின் செல்வாக்கு மதிப்பீடு சமீபத்தில் வரலாற்றுப் பின்னடைவைச் சந்தித்தது.
இந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல், வழக்கமாக வெள்ளை மாளிகையின் தற்போதைய நிர்வாகத்திற்கான வாக்கெடுப்பாகவே பார்க்கப்படுகிறது.
போர் முடிந்ததும், தேர்தலுக்குப் பிறகு எண்ணெய் விலையும் உடனடியாகக் குறையும் என்று புதன்கிழமை கூறிய டிரம்ப், ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட போதிலும், அதைத் தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.