100 கிலோவுக்கு அதிகமான போதைப்பொருள் கடத்திவந்த இரு பெண்கள், ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூ சவூத் வேல்ஸை சேர்ந்த 21 வயது யுவதியும், நியூசிலாந்தை சேர்ந்த 23 வயது யுவதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து போதைப்பொருளை கடந்த வந்த நிலையில், சிட்னி விமான நிலையத்தில் இவர்கள் சிக்கியுள்ளனர்.
சீன தேயிலை என பெயரிடப்பட்டிருந்த 50 பொதிகளில் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.