லேபர் கட்சியின் முன்னாள் அமைச்சரான கிறிஸ் எவன்ஸ் , ஆஸ்திரேலியாவில் நவீன அடிமைத்தனத்துக்கு எதிரான ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் அவர் பதவியேற்பார் எனவும், ஐந்தாண்டுகாலம் அவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கிறிஸ் எவன்ஸ் , ஜுலியா கில்லார்ட் ஆட்சியின்போது குடிவரவு அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 41 ஆயிரம் பேர் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் மாத்திரம் 16 ஆயிரத்து 400 பேர் இவ்வாறு நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனர் என்று மாநிலத்தின் நவீன அடிமைத்தனத்துக்கு எதிரான ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உழைப்பு சுரண்டல், கட்டாய திருமணம், பாலியல் தொல்லை, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை உட்பட மேலும் பல விடயங்கள் நவீன அடிமைத்தனத்தில் உள்ளடங்குகின்றன.