ஆசிய, பசுபிக் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பெரு நாட்டுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி, உலக தலைவர்களுடன் அங்கு இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபட்டுவருகின்றார்.
பிரதமருடன் விவசாயத்துறை அமைச்சரும் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், மேற்படி மாநாடு முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.
இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ள சீன ஜனாதிபதியுடனும் ஆஸ்திரேலிய பிரதமர் பேச்சு நடத்தவுள்ளார்.
ஹொங்கொங், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை இறுதிப்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.