அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என்று அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதுவர் Kevin Rudd தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் டொனால்ட் ட்ரம்ப்பை கிராமத்து முட்டாள் என்பது உட்பட பலகோணங்களில் தூதுவர் Kevin Rudd
விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தேர்தலில் ட்ரம்ப் வென்றுள்ள நிலையில், அவருடன் இணைந்து பணியாற்றும் விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
" ஆஸ்திரேலிய அரசும், அமெரிக்காவில் உள்ள தூதரகமும் ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயார் நிலையில் உள்ளன. பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் மேம்படுத்தப்படும்."- எனவும் Kevin Rudd
குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் இந்தோ - பசுபிக் பாதுகாப்பு தொடர்பில் சாதகமான அணுகுமுறை ட்ரம்ப் ஆட்சியிலும் பின்பற்றப்படும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.