சிட்னியின் கிழக்கு புறநகர் பகுதியில் இஸ்ரேல் எதிர்ப்பு கோஷத்துடன் வாகனமொன்று தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 கார்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அந்தோனி அல்பானீஸி, நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு வேளையிலேயே இந்த நாசகார சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர். உயிர் தேசம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த யூத எதிர்ப்பு நடவடிக்கையை பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் 80 ஆயிரம் டொலர்கள் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். அத்துடன், சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் 30 ஆயிரம் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.