நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது 80 மில்லியன் டொலர்கள் பெறுமதியிலான கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் 19 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது.
சர்வதேச மாயியாக் குழுக்களின் உதவியுடன், வணிக நோக்கில் பாரியளவில் பயிரிடப்படும் கஞ்சாவை அழிக்கும் நடவடிக்கையில் நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன்பிரகாரம் பசுமை இல்லம் என்ற போர்வையில் வளர்க்கப்பட்டுவந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன. பெண்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொகையான பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.