அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவந்த சமையல் நிபுணர்கள் போட்டியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 11 வயதுடைய ஜோர்ஜியா என்ற சிறுமி கிண்ணத்தை வென்று சாதித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் நெட்வேர்க் 10 தொலைக்காட்சியில் ‘ஜூனியர் மாஸ்ரர்சீவ் அவுஸ்திரேலியா – 2020’ என்ற போட்டி ஒளிபரப்பாகி வந்தது.
இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் வெற்றிபெற்ற இலங்கைச் சிறுமிக்கு, 25 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர் பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது.
குறித்த சிறுமியின் பாட்டி இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவரே தனக்கு இலங்கை உணவுகளைச் சமைப்பதற்குக் வழிவகுத்தார் என சிறுமி கூறினார்.