Australia

அவுஸ்திரேலிய மாணவர் வடகொரியாவை வேவு பார்த்தாரா?

வட கொரியாவில் சில நாள்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய மாணவர் வேவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 வயது மாணவர் பியோங்யாங்கின், அலெக் சிக்லி நாளேடுகளுக்காக வேவு பார்த்ததாக வட கொரியா கூறியது.

அலெக் சிக்லி ஒரு வாரத்திற்கு முன்னர் வட கொரியாவில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சுவீடனின் உதவியை நாடிய அவுஸ்திரேலியா சிக்லியை இரண்டு நாள்களுக்குமுன் மீட்டது.

அலெக் சிக்லி வட கொரியாவின் கிம் இல் சங் பல்கலைக்கழகத்தில் கொரிய இலக்கியம் பயின்றவர்.

வட கொரியாவுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனத்தையும் அவர் நடத்தி வந்தார். கொரிய மொழியைச் சரளமாகப் பேசும் ஆற்றல் படைத்தவர் அவர்.

அலெக் சிக்லியின் கட்டுரைகளை வெளியிடும் இணையத் தளங்களில் ஒன்றான NK News, அவர் வேவு பார்த்ததாகக் கூறப்படுவதை நிராகரித்தது.

பியோங்யாங்கின் இயல்பான வாழ்க்கை முறையைத்தான் அவர் கட்டுரைகளில் எழுதிவந்ததாக அது குறிப்பிட்டது.

Related Articles

Back to top button