ரஷ்ய கடற்படைக்கு பிரிட்டன் விதித்துள்ள மிகப்பெரிய பொருளாதாரத் தடைகளை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது. மேற்படி தடைகளில் இதன்ஓர் அங்கமாக கடற்படைக்குரிய 30 கப்பல்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் ஏற்றிச்செல்லும் கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்களை இலக்குவைத்தே புதிய தடைகள் அமுலுக்குவருகின்றன. இது ரஷ்யாவுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
குளிர்காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், உக்ரைனை பாதுகாப்பதற்குரிய ஏற்பாடாக இது அமையும் என பிரிட்டனர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டவிரோத போரில் ஈடுபடும் ரஷ்யாவின் கடற்படைக்கு பிரிட்டன் விதித்துள்ள தடையை ஆஸ்திரேலியா ஆமோதிக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உக்ரைன் போருக்கு பங்களிப்பு வழங்கும் ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு ஆஸ்திரேலியாவும் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.