குழந்தை பராமரிப்பு நிலையங்களில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
19 ஆண்டுகளாக அவர் 73 இற்கு மேற்பட்ட சிறார்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
முன்னாள் குழந்தை பராமரிப்பு நிலைய ஊழியரான 46 வயதுடைய Ashley Paul Griffith என்பவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2007 முதல் 2022 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே குயின்ஸ்லாந்தில் குழந்தை பராமரிப்பு மையங்களில் இவர், துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
மூன்று முதல் ஐந்து வயதுகளுடைய சிறுமிகளை அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என அவர்மீது முன்வைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்தே குயின்ஸ்லாந்து நீதிமன்றம் மேற்படி தண்டனையை விதித்துள்ளது. அவர் 27 ஆண்டுகளுக்கு பிணைக்கு விண்ணப்பிக்க முடியாது.