மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் காட்டுத்தீ திங்களன்று ஒரு கார் விபத்தால் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட காட்டுத் தீ பல நகரங்களில் பரவி இயல்பு வாழ்க்கையை துண்டித்தது. குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியாவின் வீட்பெல்ட் பகுதியில் வசிப்பவர்கள் தீயின் தாக்குதலுக்கு கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.
கட்டுப்பாட்டை மீறிய காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால், நூற்றுக்கணக்கான ஆஸிகள் திரும்பி வருவது இன்னும் பாதுகாப்பாக இல்லை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலையில், WA இன் அனர்த்த அவசரப்பிரிவு வெட்ஜ் தீவு மற்றும் தண்டராகன் ஷைரின் கிரே பகுதிகளில் வசிப்பவர்களை திரும்பி வருவது இன்னும் பாதுகாப்பாக இல்லை என்று எச்சரித்தது.
200 க்கும் மேற்பட்ட தொழில் மற்றும் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் கடந்த நான்கு நாட்களாக ஒவ்வொரு நாளும் தரையில் செர்வாண்டஸ் தீயை எதிர்த்துப் போராடுவதாகவும் புதன்கிழமை வெட்ஜில் இரண்டு தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர் என்றும் ஒரு தன்னார்வலர் உயிருக்கு ஆபத்தான தீக்காயங்களுடன் பெர்த்தில் உள்ள பியோனா ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக WA தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் ஆணையர் டேரன் க்ளெம் தெரிவித்தார்.
தீப் பரவலின் 50 கிமீ நீளமான மேற்குப் பகுதியானது இன்றும் பலத்த கிழக்குக் காற்றுகளினால் தீவிரமடையும் என்பதால்
நிலைமை இன்னும் மிகவும் சவாலானது என்று அவர் கூறினார்.
Cervantes, Cooljarloo, Nambung, Wedge Island மற்றும் Grey உள்ளிட்ட WA's Wheatbelt இல் பெர்த்திற்கு வடக்கே 150kms முதல் 240kms வரை அமைந்துள்ள பல பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை உள்ளது.
சபா.தயாபரன்.