மெல்பேர்ணில் தீ வைப்பு தாக்குதலுக்கு இலக்கான யூத வழிபாட்டு தலத்துக்கு ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேல் தூதுவர் அமீர் மைமன், இன்று பயணம் மேற்கொண்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், யூத சமூகத்தினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
குறித்த பயங்கரவாதச் செயல் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். எனினும், இத்தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டனர் எனக் கூறப்படும் மூவர் தொடர்பில் கருத்துகூற அவர் மறுத்துவிட்டார்.
அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் விக்டோரியா மற்றும் பெடரல் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். யூத வழிபாட்டுதலங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.