போக்குவரத்து நெருசலில் சிக்கிக்கொண்ட இலங்கை தாய் ஒருவர் தனது பிள்ளையை காருக்குள்ளயே பெற்றுக்கொண்ட சம்பவம் பிறிஸ்பேனில் இடம்பெற்றுள்ளது.
பிறிஸ்பேனில் வசித்து வரும் லியூக் பண்டார – மாதவி என்ற தம்பதிகளுக்கே இந்த குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி காலை பிரவசவேதனையேற்பட்டதையடுத்து வைத்தியசாலைக்கு செல்வதற்காக காரில் ஏறுவதற்குச் சற்று முன்னராகவே, அவரது பனிக்குடம் உடைந்தது. அதேவேளை அவர்களுடைய மகளை குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பித்தபின்னரே வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிர்பந்தமும் அவர்களுக்கிருந்தது. குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பித்த வைத்திசாலைக்கு செல்லும் போது அவர்கள் போக்குவரத்து நெருசலில் சிக்கிக் கொண்டனர். ஆனாலும், வைத்தியசாலை கார் தரிப்பிடத்தில் வைத்து காருக்குள்ளேயே அழகிய மகனை பெற்றெடுத்தனர் அத்தம்பதியினர்.

விரைவாக எல்லாம் நடந்துவிட்டது. மகன் பிறந்த போது என் கணவர் அவனை ஏந்திக்கொண்டார். என் மகனுக்கான காலஎல்லை கடந்த 16 ஆம் திகதி. அதனால் தான் அவரால் பொறுக்க முடியவில்லை விரைவாக வந்துவிட்டார். என் மகன் நலமாக இருக்கிறார் “ என்று அத்தாய் தெரிவித்துள்ளார்.