தெற்கு ஆஸ்திரேலியா, பேர்த் நகரிலிருந்து தென்கிழக்காக அமைந்துள்ள Huntingdale பிரதேசத்தில் உள்ள் வீடொன்றிலிருந்து இலங்கையை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்;.
இச்சம்பவத்தில் இந்திக குணதிலக்க (வயது 40) மற்றும் அவரது மகன் கோஹன், 6, மற்றும் மகள் லில்லி, 4, ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரால் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.35 மணியளவில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே இச் சடலங்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க தந்தையொருவரும் 4 வயதுடைய மகளும் 6 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இரண்டு பிள்ளைகளினது சடலங்களும் வீட்டின் உட்புறத்திலும் தந்தையின் சடலம் வீட்டின் பிற்பகுதியிலும் காணப்பட்டன என பொலிஸ்தரப்பில் கூறப்பட்டது.

தனது பிள்ளைகளை அழைத்துச்செல்வதற்காக அவர்களுடைய தாயார் குறித்த வீட்டிற்கு வந்துள்ளார். தனது பிள்ளைகளை அழைத்த போது அவர்கள் வரவில்லை. இதன்பின்னர் சந்தேகமடைந்த அவர் உறவினர் ஒருவரின் உதவியை கோரியநிலையிலேயே குறித்த உறவினர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.
உயிரிழந்த குணதிலகா, கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் பேர்த்தில் றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமாவார்.
இதேவேளை குணதிலக, ஆறு வாரங்களுக்கு முன்பு தான் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் தனது மனநிலை குறித்து வீடியோ பதிவொன்றை பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். அதில், “தனிப்பட்ட விடயங்கள் சார்ந்தும் மனநிலை சார்ந்தும் நான் பேஸ்புக்கில் முன்னரும் பதிவேற்றியிருந்தேன். அதனை பார்த்து என்னை தொடர்பு கொண்டவர்களுக்கு எனது நன்றிகள். புதிலளிக்காதோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். “நீண்ட காலமாக என்னை நன்கு அறிந்தவர்கள், மனச்சோர்வினால் பதிக்கப்பட்டவர் அல்லது மனச்சோர்வடைந்த ஒருவராக என்னை நினைத்திருக்கமாட்டார்கள். உண்மையில் நான் மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உறுதியாக உணர்கிறேன் அதற்கான நான் மருந்தை உட்கொண்டிருக்கிறேன், இது உதவக்கூடியது என்று நான் நினைக்கிறேன். மனநோய் என்பது என்னை சுத்தியிருப்போரையும் பாதிக்கும் அதேநேரம் தற்கொலை என்பது அதற்கான தீர்வாகது. மாறாக நண்பர்களையும் மற்றவர்களையும் நாடி அவர்களின் உதவியையும் ஆலோசனைகளை பெறுவது பாரதூரமான முடிவிகளிலிருந்து தப்பிக்க வழிகோலும்” – இவ்வாறு அவர் பதிவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ மனநிலை தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் 131114 என்ற இலக்கத்தையும் உடனடி உதவிகளுக்கு 1300224636,1300555788,1800552002,1300659467 போன்ற இலக்கத்துடன் தொடர்புகள் கொள்ளவும்.