தனது தந்தை விட்ட தவறுக்கு பொறுப்புக்கூறும் முகமாக தான் சபையின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக Hillsong திருச்சபையின் ஸ்தாபகர் Brion Houston கூறியுள்ளார்.
காலஞ்சென்ற இவரது தந்தை 1970ம் ஆண்டு சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்தார். இந்த விடயம் போதகருக்கு தெரிந்திருந்தும் அவர் அந்த விடயத்தை மறைத்ததாக போதகர் மீது அவுஸ்திரேலிய போலீசார் குற்றம் சுமத்தியிருந்தனர். தந்தை மீதான குற்றச்சாட்டை இவர் மறுத்திருந்தார்.
திருச்சபை குழுவினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திருச்சபையின் நலன் கருதி தான் Hillsong’ திருச்சபையி லிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எதிராக நேரடியாக போராடப்போவதாகவும் Houston அறிவித்துள்ளார்.
1983ம் ஆண்டு Houston தனது மனைவி Bobbie உடன் இணைந்து Hillsong சபையை உருவாக்கியிருந்தார். இந்தச்சபை தற்போது 30 நாடுகளில் 150.000 வாராந்த பிரார்த்தனையாளர்களை கொண்டுள்ளது.