மாணவர்கள் ஒருபாலின உறவு, ஆபாசபடங்கள் உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்த Brisbane Christian கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் வழமைக்கு மாறான பாலுறவில் ஈடுபடும் மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக்கொள்ள மாட்டாது எனவும் அவர்களை நீக்குவதற்கு அதிகாரம் உண்டு எனவும் கல்லூரி நிர்வாகி பாதிரியார் Brian Mulhern கூறியுள்ளார். நாங்கள் கிறிஸ்தவ மதநம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக நிர்வாகம் பெற்றோரிடம் நிபந்தனை அடங்கிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுமாறு கோரியிருந்தது. அதில் மாணவர்கள் ஒருபாலுறவு, பாலியல் உறவு, விபசாரம், என்பவற்றில் ஈடுபடக்கூடாது, ஆபாசப்படங்களை எடுத்து வரக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்த ஒப்பந்திலேயே ஒப்பமிடுமாறு பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 26,000 பெற்றோர்கள் இணைந்து இணையத்தின் மூலமாக மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். சில பெற்றோர் தமது பிள்ளைகளை வேறு கல்லூரிகளில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.