லெபனானின் இராணுவத் தளபதி ஜோசப் அவுன் அந்நாட்டில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் ஊடாகவே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், புதிய ஜனாதிபதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளiமை ஒரு திருப்பமாக பார்க்கப்படுகின்றது.
ஜோசப் அவுன் 2017 இல் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
அதேவேளை, லெபனானில் புதிய ஜனாதிபதி தேர்வை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
லெபனானில் ஸ்தீரத்தன்மை மற்றும் மறுசீரமைப்புக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.