சிட்னி மேற்கு பகுதியில் பொலிஸ் அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் கடமையில் இல்லாத சமயத்திலேயே அவர்கள் இலக்குவைத்து தாக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றன.
நியூ டவுனில் உள்ள என்மோர் வீதியில் பொலிஸ் அதிகாரிகள் இரவுNளையில் பயணத்துக்கொண்டிருக்கையிலேயே, அவர்களை அணுகிய மூவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
படுகாயமடைந்த 25 வயதுடைய பொலிஸ் அதிகாரிகள் இருவரும், மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இதனையடுத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது சந்தேக நபர் தேடப்பட்டுவருகின்றார்.