மெல்பேர்ணிலுள்ள வீடொன்றில் வயோதிப பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர், 40 வருடங்களுக்கு பிறகு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் தற்போதைய வயது 69 ஆகும்.
ஜெஸ்ஸி கிரேஸ் லாடர் என்ற 82 வயது மூதாட்டி 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் 1983 ஆம் ஆண்டிலும் அவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
1977 ஆம் ஆண்டு கணவரை இழந்த குறித்த பெண், 55 ஆண்டுகளாக அந்த வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். 1993 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார். நீதி கிடைக்காத நிலையிலேயே அவர் உயிரிழந்திருந்தார்.
மேற்படி பலாத்கார சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், இன்று சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தே பாலியல் வன்கொடுமையை புரிந்துள்ளார். பொலிஸாருக்கு தெரியப்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.