ஆஷ்விட்ஸில் நடைபெறும் நினைவு நிகழ்வில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் பங்கேற்கக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் வலியுறுத்தியுள்ளார்.
உலகையே நடுங்க வைத்த ஹிட்லரின் ’ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ்’ வதை முகாம் விடுதலையின் 80 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு போலந்தில் அடுத்தவாரம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
ஆஸ்திரேலிய சட்டமா அதிபரின் குடும்பம் ஹிட்லரின் வதையால் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் தாத்தாஇ பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேற்படி நிகழ்வில் பங்கேற்பதற்கு வெளிவிவகார அமைச்சர் பொருத்தமற்ற நபர் என்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் விவகாரம் தொடர்பிலும்இ யூத எதிர்ப்பு போக்கு தொடர்பிலும் அவர் கையாண்ட அணுகுமுறையை அடிப்படையாகக்கொண்டே எதிர்க்கட்சி தலைவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.