ட்ரம்புடன் பேச்சு நடத்த புடின் தயார்: அமெரிக்கா அழைப்புக்காக காத்திருக்கும் ரஷ்யா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின தயாராக உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ அழைப்புக்காக காத்திருப்பதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக விரைவில் புடினை சந்திக்க விரும்புவதாக கடந்த வியாழக்கிழமை ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் , புடினும், டிரம்பும் தொலைபேசி மூலம் உரையாட வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அவர், “ ஆழமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான நேரடி சந்திப்புக்கு முன்னதாக ஒரு தொலைபேசி உரையாடல் மிகவும் அவசியம். ட்ரம்ப் உடன் தொலைபேசியில் உரையாட புடின் தயாராக இருக்கிறார்.
அமெரிக்காவின் அழைப்புக்காக காத்திருக்கின்றோம்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.