சிட்னி கிழக்கு புறநகர் பகுதியான போண்டியில் இளம் பெண்கள்மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 மற்றும் 16 வயதுடைய இரு சிறார்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இச்சம்பவம் யூத எதிர்ப்பு தாக்குதலாக கருதப்பட்ட நிலையில், இது யூத எதிர்ப்பு தாக்குதல் அல்ல என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தவேளை சந்தேக நபர்கள் காரொன்றில் தப்பிச்சென்றனர். இடையில் கார் விபத்துக்குள்ளானது. காருக்குள் இருந்து முட்டைகள் மீட்கப்பட்டன.
காரின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளரிடம் விசாரித்தபோது அதனை ஓட்டிச்சென்ற 16 வயது சிறுவனும், அதில் பயணித்த 14 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டனர்.
சிறார் நீதிமன்றத்தில் இவர்கள் முற்படுத்தப்பட்ட பின்னர், நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.