யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக நாடாளுமன்றம் இன்று கூடியது.
இதன்போது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர், அல்லெக்ரா ஸ்பெண்டர், யூத எதிர்ப்பு எழுச்சியைக் கண்டித்தும், யூத எதிர்ப்புக்கு எதிராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கோரியும் தீர்மானமொன்றை முன்மொழிந்தார்.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைத்து எம்.பிக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.